வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – கங்குவேலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இன்று ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
திருக்கரைசை மாநகரம் என அழைக்கப்படும் திருகோணமலையில், அகத்தியர் ஸ்தாபனம் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்குவேலி கிராமத்தின் நுழைவாயிலில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
மூதூர் – கங்குவேலி கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கங்குவேலி கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கங்குவேலி கிராமத்தின் நுழைவாயிலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/inauguration-of-thiruvalluvar-statue-in-kanguveli-1786270680
