Home இலங்கை கடலில் நீராடச் சென்ற தாய், மகள் உட்பட நால்வர்! தீவிரமாக தேடும் பொலிஸார்

கடலில் நீராடச் சென்ற தாய், மகள் உட்பட நால்வர்! தீவிரமாக தேடும் பொலிஸார்

0
image

கம்பஹா, பமுனுகம – எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண்ணொருவர், 

அவரது 4 வயது மகள், 13 வயதுடைய சிறுவன் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-mother-who-went-swimming-in-the-sea-along-with-her-daughter-and-two-others-police-are-searching-intensively-1788150792

NO COMMENTS

Exit mobile version