Home இலங்கை கட்டுநாயக்க வந்திறங்கிய பொலிவூட் நட்சத்திரங்கள் – பலத்த வரவேற்பு

கட்டுநாயக்க வந்திறங்கிய பொலிவூட் நட்சத்திரங்கள் – பலத்த வரவேற்பு

0
image

பிரபல பொலிவூட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி குந்த்ரா மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் இன்று (12) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கைக்கு வருகை தந்த இந்நட்சத்திரங்களுக்கு, விமான நிலையத்தின் சொகுசு மற்றும் பிரத்தியேக வசதிகளைக் கொண்ட அதிவேக ‘சில்க் ரூட்’ விசேட சேவை முனையத்தின் ஊடாக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சேவையின் கீழ், விமான நிலையத்திற்குள் நுழைந்த தருணம் முதல் வெளியேறும் வரை, முன்னுரிமை அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணச் சோதனைகள், தனிப்பயனாக்கப்பட்ட உதவிகள் மற்றும் விரைவான நடைமுறைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச முக்கியஸ்தர்கள், உயர்மட்டப் பயணிகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பிரபலங்களுக்கு தாமதமற்ற, நேர்த்தியான மற்றும் பிரத்தியேக சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ‘சில்க் ரூட்’ சேவை, தொடர்ந்து பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source: https://samugammedia.com/kollywood-stars-arrived-in-katunayake—a-grand-welcome-1781263023

NO COMMENTS

Exit mobile version