Home இலங்கை இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் கப்பல்கள் தொடர்பில் தேசியக் கொள்கை உருவாக்கம்

இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் கப்பல்கள் தொடர்பில் தேசியக் கொள்கை உருவாக்கம்

0

இலங்கையின்(Sri lanka) கடற்பரப்பில் நுழையும் கப்பல்களைக் கையாளும் விடயம் தொடர்பில் தேசியக் கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அரசாங்கத்தின் நீலப் பொருளாதார (BLUE ECONOMY) செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசியக் கொள்கை

இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் கப்பல்களின் விபத்துக்களின் போது மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் இழப்பீடுகளைப் பெறும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் குறித்த தேசியக் கொள்கை உருவாக்கப்படவுள்ளது.

அதன் மூலம் கடந்த காலங்களில் நிகழ்ந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து போன்ற சம்பவங்களின் போது உடனடியாக இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version