Home இலங்கை கண்டியில் திடீரென சரிந்த 20 அடி மண்மேடு – ஆபத்தான நிலையில் தொழிலாளி!

கண்டியில் திடீரென சரிந்த 20 அடி மண்மேடு – ஆபத்தான நிலையில் தொழிலாளி!

0
image

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று (31) நண்பகல் 11 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுமார் 20 அடி உயரமான மண்மேடு எதிர்பாராதவிதமாக சரிந்து தொழிலாளி மீது வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளியை பிரதேசவாசிகளும் சக ஊழியர்களும் இணைந்து மீட்டு, உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியைச் சேர்ந்த  43 வயதுடைய குறித்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிரதேச பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-20-foot-sand-mound-suddenly-collapsed-in-kandi—worker-in-a-dangerous-situation-1785489823

NO COMMENTS

Exit mobile version