Home இலங்கை சமூகம் மருத்துவ பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்து: அதிகரித்துள்ள நிலுவை தொகை

மருத்துவ பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்து: அதிகரித்துள்ள நிலுவை தொகை

0

சுகாதார அமைச்சின் (MInistry of Health) மருத்துவ விநியோகப் பிரிவினால் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளுக்காக விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ (Chamal Sanjeeva) விளக்கமளித்துள்ளார்.

நிலுவைத் தொகை

அந்தவகையில், விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 800 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகத் அவர் கூறியுள்ளார்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம், மருத்துவ வழங்கல் பிரிவிடமிருந்து தாம் பெற்றுக் கொண்ட தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/health-ministry-faces-800m-drug-dues-1721198791

NO COMMENTS

Exit mobile version