அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (22) கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் 4 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கண்டி பிரதான நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளையடுத்து, இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை குறித்த பகுதிகளுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரஜபிஹில்ல, மெதவல (பழைய மற்றும் புதிய) சேவை நீர்த்தேக்கங்கள், கலகெதர சேவை நீர்த்தேக்கம் மற்றும் மாவத்தகம சேவைப் பகுதிகளுக்குட்பட்ட பல கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீர்வெட்டால் பாதிக்கப்படவுள்ளன.
உடுவாவல, பலகொல்ல, ரஜபிஹில்ல, அத்தரகம, மெதவல, கெவும்கோஹே, ஹரங்கஹதென்ன, படுகொட, எஹெலகஸ்ஹின்ன, கலகெதர, வேபட, போயகொட, மாவத்தகம உள்ளிட்ட பல பகுதிகள் இந்த நீர்வெட்டின் கீழ் வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கமான நீர் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source: https://samugammedia.com/power-outage-for-4-hours-today-in-many-parts-of-kandy-district-1784686330
