Home சினிமா மதகஜராஜா திரை விமர்சனம்

மதகஜராஜா திரை விமர்சனம்

0

தமிழ் சினிமாவில் ஒரு படம் கிடப்பில் இருந்து 5,6 வருடம் தள்ளி வந்ததை பார்த்திருப்போம், ஆனால், விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 13 வருடம் கிடப்பில் இருந்து வந்த மதகஜராஜா இன்று வெளியவர, படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்ப்போம். 

கதைக்களம்

விஷால் அவருடைய 3 நண்பர்கள் சந்தானம், சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா தன் பள்ளி வாத்தியார் மகள் திருமணத்திற்காக ஒன்று சேர்கின்றனர்.

அங்கு அவர்கள் செம கலாட்டா, ஜாலியாக பொழுது கழிக்க, அப்போது சந்தானம் தன் மனைவியை விரைவில் விவாகரத்து செய்ய போகிறார் என்பதை அறிந்து அதை விஷால் சரி செய்கிறார்.

அதே நேரத்தில் சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா இருவருமே தங்கள் தொழிலில் தொழிலதிபர் சோனுசூட்-ஆல் பாதிக்கப்பட்டதை அறிகிறார்.

உடனே நண்பர்கள் பிரச்சனை தன் பிரச்சனீ என சோனு சூட்-யை எதிர்க்க விஷால் கிளம்புகிறார், சோன் சூட் பணப்பலம் முன்பு விஷால் தன் நண்பர்கள் பிரச்சனையை தீர்த்தாரா என்பதே மீதிக்கதை.
 

படத்தை பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து வரும் படம் என்றாலே ஓடாது என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க, இதில் வரலாறு போன்ற ஒரு சில படங்களே தப்பித்து உள்ளது. அந்த வகையில் மதகஜராஜாவும் தப்பித்துள்ளது.

அதிலும் 13 வருடம் முன்பு நமக்கு பிடித்த அனைத்து நடிகர்களையும் பார்ப்பது ஏதோ சன் டிவி-ல் ஞாயிற்றுக்கிழமை ப்ரேம் டைமில் படம் பார்ப்பது போல் ஒரு ட்ராமாவை கொடுத்துள்ளார் சுந்தர்.சி.

விஷால் தன் பீக் டைமில் இருந்த லுக், மேனரிசம், நடனம், ஸ்டெண்ட் என அனைத்திலும் பட்டையை கிளப்பியிள்ளார், இதே ரூட்டில் வந்துருந்தால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் இடத்தில் இவர் இருந்திருப்பார், அடுத்த விஜய் போட்டியில் கண்டிப்பாக இருந்திருப்பார்.

அதையெல்லாம் விட சந்தானம் எப்படி இருந்த மனுஷன், அதை விட எப்படி சிரிக்க வைத்த மனுஷன் என்று தான் சொல்ல வேண்டும், தான் வரும் இடம் அனைத்திலும் தன் ஒன் லைனில் தூள் கிளப்புகிறார், இரண்டாம் பாதி முழுவதும் ஆக்‌ஷன் என கொஞ்சம் தொய்வாகும் இடத்தில் சரியாக எண்ட்ரி கொடுத்து கலகலப்பு ஆக்குகிறார்.

மனோபாலா ஒரு 20 நிமிடம் அட்ராசிட்டி செய்துள்ளார், கண்டிப்பாக தியேட்டரே விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி. ஆனால், சுந்தர். சி படம் என்றாலே க்ளாமர் இருப்பது இயல்பு தான்.

ஆனால், இதில் அஞ்சலி, வர லட்சுமி க்ளாமர் காட்சிகள் எல்லை மீறல், அப்போது இருந்த ரசிகர்கள் மனநிலை இப்போது இருக்குமா என்பது தெரியவில்லை, அந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு இந்த ட்ரெண்ட்-க்கு ஏற்றார் போல் மேட்ச் செய்ததே பெரிய விஷயம், அதிலும் பழைய போன்-கள் எல்லாம் படத்தில் வருவது செம நாஸ்டாலஜியா.

விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள், பின்னணி இசை சூப்பர்.

க்ளாப்ஸ்

விஷால் முழு கமர்ஷியல் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

சந்தானம் கண்டிப்பாக இவரை தமிழ் சினிமா மட்டுமின்றி பல நடிகர்களும் காமெடி நடிகராக மிஸ் செய்கின்றனர் தான்.

மனோ பாலா சந்தானம் விஷால் காமெடி காட்சிகள்.


பல்ப்ஸ்

எல்லை மீறிய க்ளாமர் காட்சிகள்.

லாஜிக் மீறல்கள்.

மொத்தத்தில் 13 வருடம் கழித்து வந்தாலும் நல்ல கமர்ஷியல் சினிமா வெற்றியை தடுக்க முடியாது என்பதற்கு மதகஜராஜா ஒரு உதாரணம்.
 

NO COMMENTS

Exit mobile version