Home இலங்கை கல்முனையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்; சுகாதார அபாயம் குறித்து மக்கள் கவலை

கல்முனையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்; சுகாதார அபாயம் குறித்து மக்கள் கவலை

0
image

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாத காரணத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாகவும், இதனால் பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட பொது சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், தொடர்ச்சியான மற்றும் முறையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/piles-of-garbage-lying-at-the-street-corner-people-worried-about-health-risks-1786011851

NO COMMENTS

Exit mobile version