Home இலங்கை கல்முனையில் 160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

கல்முனையில் 160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

0
image

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை முகையதீன் பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி களுவாராச்சியின் தலைமையில், கல்முனை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். ஜிப்ரியின் நெறிப்படுத்தலில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்-ஹாஜ் உஸ்தாத் மெளலவி சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி தலைமையில் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியும், கௌரவ அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமரட்னவும் கலந்து கொண்டனர்.

மேலும் பொலிஸ் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக் குழுவினர், உலமாக்கள், மௌலவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இலங்கை பொலிஸ் சேவை 1866ஆம் ஆண்டு செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு 160ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

Source: https://samugammedia.com/special-prayers-held-in-kalmunai-on-the-occasion-of-160th-police-day-1788838157

NO COMMENTS

Exit mobile version