Home இலங்கை சமூகம் தவறுகளை ஏற்க மறுக்கும் தமிழக அரசு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தவறுகளை ஏற்க மறுக்கும் தமிழக அரசு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் குற்றச்செயல்களை இந்திய அரசாங்கம் ஏற்க மறுக்கின்றது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். 

மாதகல் பகுதியில் இன்றையதினம் (29.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “2016ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேச்சுவார்த்தை நடந்த போது, ஒரு இணக்கப்பாடு ஏகமனதாக எட்டப்பட்டது. 

அதாவது, இழுவை மடி படகுகள் தொழில் கெடுதலானது, எனவே அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இரு நாட்டு அரசாங்கமும் அக்கரையோடு தீர்மானம் எடுத்தார்கள். 

இதன் பின்னர் அந்த விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால், 2017ஆம் ஆண்டு இலங்கை இழுவைமடி தொழில் ஈடுபடுவதற்கு தடை என்னும் சட்டம் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் தெரிவித்துள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version