Home இலங்கை காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து: இராணுவப் பொருட்கள் எரிந்து நாசம்!

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து: இராணுவப் பொருட்கள் எரிந்து நாசம்!

0
image

காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகப் பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீமேந்துத் தொழிற்சாலையில் உள்ள பழைய இரும்புகளை அகற்றும் பணிகள் தற்பொழுது தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று மாலை இரும்பு அகற்றும் பணிகள் வழக்கம்போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம், 

அங்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயுவில் (Gas) ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து சம்பவித்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த தீச் சுவாலை, தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருந்த 

இராணுவத்தினரின் உடைகள் மற்றும் மெத்தைகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கும் வேகமாகப் பரவியது.

இதன் காரணமாக தொழிற்சாலை வளாகத்தில் இருந்து பாரிய தீச் சுவாலைகள் எழும்பியதுடன்,அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்து குறித்து உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் மூலம் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்விபத்தினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த சொத்துச் சேத விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/massive-fire-accident-at-kankesanthurai-cement-factory-military-items-burned-and-destroyed-1782309482

NO COMMENTS

Exit mobile version