Home இலங்கை காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! – மனைவியின் சகோதரனாலேயே பறிபோன உயிர்

காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை! – மனைவியின் சகோதரனாலேயே பறிபோன உயிர்

0
image

அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.

Source: https://samugammedia.com/young-husband-killed-over-property-dispute—life-taken-by-wifes-brother-1784261682

NO COMMENTS

Exit mobile version