யாழ்ப்பாணம், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்கு சென்ற சிலர், சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்து இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கரையொதுங்கிய சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்களின் சடலமாக இருக்குமா எனவும் பொலிஸார் ஆராய்ந்துள்ளனர். எனினும், அண்மையில் எந்தவொரு மீனவரும் காணாமல்போனதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
