Home இலங்கை காலாவதியான மருந்துகளை பயன்படுத்திய 23 தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு

காலாவதியான மருந்துகளை பயன்படுத்திய 23 தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு

0
image

காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தியமை தொடர்பில் 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பில் நீதிமன்றங்கள் விதித்த மொத்த அபராதத் தொகை 57 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவாகும் என அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏனைய நிறுவனங்களுக்கு எதிராகவும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொது சுகாதாரத்தை பாதுகாப்பதையும் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு, தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்தகங்களை மையமாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

Source: https://samugammedia.com/case-filed-against-23-private-hospitals-for-using-expired-medicines-1784866958

NO COMMENTS

Exit mobile version