Home இலங்கை கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்: புயலால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம்!

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்: புயலால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணம்!

0
image

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 43 பயனாளிகளுக்கு காணி உரிமங்களும், திக்வா புயல் காரணமாக வணிக ரீதியாகப் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நிவாரணக் காசோலைகளும் இன்று (29) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.

திக்வா புயலினால் வியாபார ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்ட 100 வர்த்தகர்களுக்காக,  மொத்தமாக 8 மில்லியன் (80 லட்சம்) ரூபா பெறுமதியான நஷ்டஈட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் பிரதேச இணைப்பாளர் அஷ்ரப் இம்ரான், கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். நியாஸ் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் உட்படப் பலர் கலந்து சிறப்பித்தனர். 

Source: https://samugammedia.com/land-rights-granted-to-43-people-in-kinnaiyav-relief-for-100-people-affected-by-the-cyclone-1785310588

NO COMMENTS

Exit mobile version