Home இலங்கை கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

0
image

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலகத்திலிருந்து புகை வெளியேறுவதை அவதானித்த காவலாளர், உடனடியாக சங்கத்தின் பணியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பணியாளர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் வளிச்சீராக்கி, நிழற்படப் பிரதி இயந்திரம் உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/fire-accident-at-the-kilinochchi-palm-coconut-development-cooperative-society-headquarters-1784273852

NO COMMENTS

Exit mobile version