Home இலங்கை கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் தோப்பூரில் சிரமதானம்!

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் தோப்பூரில் சிரமதானம்!

0
image

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் அதனை அண்டிய இடங்கள் இன்று திங்கட்கிழமை (22) சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

இதனை மூதூர்,தோப்பூர் கமநல சேவை நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது வயல் நிலங்களில் காணப்பட்ட கிரிமிநாசினி போத்தல்கள்,களன்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் சிரமதானம் மூலம் அகற்றப்பட்டன.

அத்தோடு வயல் நிலங்களில் வீசப்படும் கிரிமி நாசினி போத்தல்களை சேகரிப்பதற்கா விவசாய சங்கங்களுக்கு பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இதில் அல்லை விவசாய வதிவிட திட்ட முகாமையாளர் ரணத்துங்க,மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/shramadhanam-in-thoppur-under-the-clean-sri-lanka-work-program-1782117261

NO COMMENTS

Exit mobile version