Home இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு – கல்வி நடவடிக்கை இணையவழியில்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு – கல்வி நடவடிக்கை இணையவழியில்!

0
image

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை (10) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை இணையவழியில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 63,835 டெங்கு நோய்த்தொற்றுகளும், 42 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நோய்த்தொற்று இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகக் காணப்படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி , ஜூன் மாதத்திலேயே மிக அதிகபட்சமாக 21,543 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

அதனைத் தொடர்ந்து மே மாதத்தில் 8,590 வழக்குகளும், ஜூலை மாதத்தில் இதுவரை 8,451 வழக்குகளும் பதிவாகியுள்ளன

Source: https://samugammedia.com/71-students-at-colombo-university-participate-in-dengue—education-activities-online-1783571158

NO COMMENTS

Exit mobile version