Home இலங்கை சட்டவிரோத தேயிலைக் கழிவுடன் டிப்பர் வாகனம் மற்றும் சாரதி கைது!

சட்டவிரோத தேயிலைக் கழிவுடன் டிப்பர் வாகனம் மற்றும் சாரதி கைது!

0
image

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில், அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் தேயிலைக் கழிவுகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகரபத்தனையில் இருந்து குளியாப்பிட்டிய நோக்கி சுமார் 6000 கிலோ தேயிலைக் கழிவுகள் ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (11) இரவு மறித்து சோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது, குறித்த கழிவு தேயிலைக்கு தேவையான எந்தவொரு முறையான அனுமதிப்பத்திரமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, வாகனத்தின் சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனத்துடன் சந்தேகநபர் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/tipper-vehicle-and-driver-arrested-with-illegal-tea-waste-1781252843

NO COMMENTS

Exit mobile version