Home இலங்கை சாவகச்சேரி நகரசபை உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு

0
image

சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுள சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இன்று(28) இடம்பெற்றது.

இதன்போது உப தவிசாளர் தெரிவிற்காக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக முத்துலிங்கம் கோகுலராஜ் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சி சார்பாக பவுலினா சுபோதினி தபானராசன் போட்டியிட்டார்.

18 உறுப்பினர்கள் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், தமிழரசுக்கட்சிக்கு 6 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனாநாயக கட்சிக்கு ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.

இவர்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நீக்கப்பட, தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் வெளிநாடு சென்றிருந்தார்.

இந்த நிலையில் திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதன்போது இரு கட்சிகளுக்கும் தலா 7 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தமிழரசுக்கட்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆதரவளித்தார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவரும் நடுநிலைமை வகித்தனர். அதனையடுத்து திருவுள சீட்டு மூலம் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

அதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு செய்யப்பட்டார். 

Source: https://samugammedia.com/muthulingam-gokulraj-elected-as-deputy-mayor-of-savakacheri-municipality-1785220827

NO COMMENTS

Exit mobile version