Home இலங்கை சிடிசன் மிரர் பிரதேச உற்பத்தி சுட்டெண் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முதலிடம்!

சிடிசன் மிரர் பிரதேச உற்பத்தி சுட்டெண் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முதலிடம்!

0
image

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட “citizen  mirror “பிரதேச உற்பத்தி திறன் சுட்டெண் தொடர்பான (2025ம் ஆண்டு) போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் AAA தரத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சிறப்புப் பெற்றது.

 இவ் வெற்றிக்கு முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான (காணி) திருமதி ஜெ.ஸ்ரீபதி  அவர்களின் சிறந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும் முக்கிய காரணமாக அமைந்ததுடன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் திரு. க. சதிசேகரன்,  உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோ.பிரதீபா ஆகியோர்கள் கொழும்பு ஹோல்பீஸ் ஹோட்டலில் (16.06.2026) இடம் பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலகத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர் 

இவ்வெற்றியானது , அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் சேவைத் திறன் மேம்பாட்டிற்கான கூட்டு முயற்சியின் மகத்தான பலனாகும்.

Source: https://samugammedia.com/thambalagamam-divisional-secretariat-wins-first-place-in-the-citizen-mirror-regional-productivity-index-competition-1781691991

NO COMMENTS

Exit mobile version