Home இலங்கை சிறார்களின் மனநலப் பாதுகாப்புக்காக சமூக ஊடகச் சட்டங்களை கடுமையாக்கும் பிரிட்டன்

சிறார்களின் மனநலப் பாதுகாப்புக்காக சமூக ஊடகச் சட்டங்களை கடுமையாக்கும் பிரிட்டன்

0
image

ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இரவு நேரத்திலிருந்து அதிகாலை 6 மணி வரை இந்த வயதுப் பிரிவினரின் சமூக ஊடகப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

முன்னதாக, கடந்த மாதம் ஐக்கிய இராச்சியம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக Snapchat, TikTok, YouTube, Instagram மற்றும் Facebook போன்ற சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டைத் தடை செய்ய முடிவெடுத்திருந்தது. அந்த சட்டங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளன.

சிறுவர்களின் மனநலனைப் பாதுகாத்தல், இணைய அடிமைத்தனத்தைக் குறைத்தல் மற்றும் சமூக ஊடகங்களின் பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/britain-to-tighten-social-media-laws-to-protect-childrens-mental-health-1784093324

NO COMMENTS

Exit mobile version