Home இலங்கை சிறைச்சாலைக்குள் வெடித்த மோதல்; இரு கைதிகள் பலி – 18 பேர் காயம்

சிறைச்சாலைக்குள் வெடித்த மோதல்; இரு கைதிகள் பலி – 18 பேர் காயம்

0
image

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட மோதலில் 20 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையினுள் ஏற்பட்ட இந்த மோதலைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை உருவானது. 

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகக் களம் இறங்கி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்த மோதலில் காயமடைந்த 20 கைதிகளும் அவசரமாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

காயமடைந்த ஏனைய 18 பேரும் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மோதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், 

இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸின் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://samugammedia.com/clash-broke-out-inside-the-prison-two-prisoners-dead—18-injured

NO COMMENTS

Exit mobile version