Home இலங்கை சுற்றாடலை பாதுகாப்போம்.! எல் நினோ குறித்து மஸ்கெலியாவில் விழிப்புணர்வு

சுற்றாடலை பாதுகாப்போம்.! எல் நினோ குறித்து மஸ்கெலியாவில் விழிப்புணர்வு

0
image

2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, மஸ்கெலியா பிரதேச சபையினால் எல் நினோ தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது.

“எமது பிரதேசத்தின் சுற்றாடலை பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில், மஸ்கெலியா பிரதேச சபை முன்பாக ஆரம்பமான நடைபவனி மஸ்கெலியா நகரம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சபையின் தலைவர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எல் நினோ என்பது பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.

இதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மழைவீழ்ச்சி மற்றும் வானிலை நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன், சில பகுதிகளில் கடும் வறட்சியும் மற்றைய பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும்.

எல் நினோ மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், குறிப்பாக பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/let-us-protect-the-environment-awareness-program-on-el-nio-in-maskeliya-1789623692

NO COMMENTS

Exit mobile version