சிங்கள மக்கள் இன ரீதியான கருத்துக்களைத் தற்போது விரும்புவதில்லை என்றும் அவர்கள் இவ்வாறான கருத்துக்களால் கவலையுற்றும் களைத்துப் போயும் உள்ளார்கள் எனவும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இன்று(16.09.2024)இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பேரம் பேசல்
பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கடந்த வாரம் என்னை சந்தித்திருந்தார். அவர் வந்த காரியம்
வெற்றியடையவில்லை.
நாங்கள் திடமாக தமிழ் பொது வேட்பாளருக்குப்
பின்னாலேயே அணி வகுத்து நிற்கப் போகின்றோம் என்ற என் கரு
த்தை அவர்
சுமந்து திரும்பினார்.
5
சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறும் எம் தமிழ் பிரிவினர் அவ்வாறு வாக்களித்து, பின்னர் நாம் பேரம் பேசலாம் என்று
கூறுகின்றார்கள்.
முன்னர் இவ்வாறு கூறித்தான் சிங்கள வேட்பாளர்களுக்கு எம் மக்கள் வாக்களித்தார்கள்.
அடக்கு முறை
ஆனால் கண்ட பயன் ஏதுமில்லை. இவ்வாறு பேரம் பேசப் போவதாகக் கூறுபவர்கள். முதலில் கடந்த கால பேரப் பேச்சுக்களினால் எதனைப் பெற்றுக் கொடுத்தார்கள் என்பதைக் கூற வேண்டும்.
வெல்ல முடியாது
என்று கண்டவுடன் அடக்கு முறையாளர்களுடன் கைகோர்க்க வேண்டும் என்பதா
இவர்களின் அரசியல் சித்தாந்தம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
You May Like This Video