Home சினிமா வேட்டையன் படத்தின் இசை வெளியிட்டு விழா! ரஜினியின் மாஸ் ஸ்பீச்.. எப்போது தெரியுமா

வேட்டையன் படத்தின் இசை வெளியிட்டு விழா! ரஜினியின் மாஸ் ஸ்பீச்.. எப்போது தெரியுமா

0

வேட்டையன் 

இயக்குனர் TJ ஞானவேல் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய இவர் அடுத்ததாக வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

அஜித் ரசிகையாக இருந்தாலும் மிகவும் கஷ்டமாக உள்ளது..விஜய் குறித்து உணர்ச்சிவசமாக பேசிய முன்னணி நடிகை

இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், அபிராமி, ரக்‌ஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை வெளியிட்டு விழா

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து முதல் பாடல் மனசிலாயோ சமீபத்தில் வெளிவந்து டிரெண்டிங்கில் உள்ளது. எங்கு திரும்பினாலும் இந்த பாடல் தான் ஒளிந்துகொண்டு இருக்கிறது.

அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர். இசை வெளியிட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மாஸ் ஸ்பீச்-ஐ கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version