Home இலங்கை செம்மணியில் ஓயாத அகழ்வுப் பணி.. குவியலாக தென்பட்ட என்புக்கூடுகள்

செம்மணியில் ஓயாத அகழ்வுப் பணி.. குவியலாக தென்பட்ட என்புக்கூடுகள்

0
image

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாள் அகழ்வு பணிகளின் போது, 572 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

குவியலாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினமும் 03 சோதனைக்குழிகள் அகழப்பட்ட நிலையில், அவற்றில் இருந்து என்புக்கூடுகள் எவையும் அடையாளம் காணப்பட்டவில்லை. 

இதுவரையில் புதைகுழிகளை அண்மித்த பகுதிகளில் 14 சோதனைக்குழிகள் அகழப்பட்ட நிலையில் , 05 சோதனைக்குழிகளில் இருந்து 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/endless-excavation-work-in-semmani-piles-of-bones-discovered-1786979474

NO COMMENTS

Exit mobile version