Home இலங்கை செம்மணியில் தொடரும் அகழ்வு – குழந்தைகள் உட்பட 355 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணியில் தொடரும் அகழ்வு – குழந்தைகள் உட்பட 355 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

0
image

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இன்றையதினம் மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 24ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம் நடைபெற்றது.

அதன் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் குழந்தை ஒன்று , நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , புதிதாக மேலும் இரண்டு என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 355 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 341 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றையதினம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தொல்லியல் குழுவினரால் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/excavation-continues-at-semmanai—355-bones-found-including-those-of-children

NO COMMENTS

Exit mobile version