இராணுவப் புலனாய்வுத் துறையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே அநீதியான முறையிலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் நடத்தப்படுவதாகக் கண்டித்து, பல எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் கலந்துகொண்டிருப்பவர்கள் சுரேஷ் சல்லேயின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
அதிலிலொரு பெண், புலிக்கு பாலூட்டும் அனுரகுமார என உரத்த குரலில் சத்தமிட்டார். இந்நிலையில், சத்தியாக்கிரகத்துக்கு பின்னால் வந்த ஜீன் ஆண்டியை, அங்கிருந்தவர்கள் விரட்டிவிட்டனர்.
