Home இலங்கை ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வைப்பு

ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று வைப்பு

0
image

‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026  ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன் முதலாம் கட்டத்தின் கீழ், பத்து இலட்சத்து பன்னிரண்டாயிரத்து எண்ணூற்று பன்னிரண்டு (1,012,812) பயனாளிக் குடும்பங்களுக்காக ஒன்பது பில்லியன் முந்நூற்று ஐம்பத்தேழு மில்லியன் முந்நூற்று நாற்பத்தாறு ஆயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் நிதி (9,357,346,250) இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

அதேபோல், இரண்டாம் கட்டத்தின் கீழ், இரண்டு இலட்சத்து பதினோராயிரத்து அறுநூற்று நாற்பத்தேழு (211,647) பயனாளிக் குடும்பங்களுக்காக இரண்டு பில்லியன் நானூற்று அறுபத்தெட்டு மில்லியன் இருநூற்று ஐம்பது ஆயிரம் ரூபாய் நிதி (2,468,250,000) இன்றைய தினம் அவற்றுக்குரிய அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் இந்த இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் பன்னிரண்டு இலட்சத்து இருபத்துநான்காயிரத்து நானூற்று ஐம்பத்தொன்பது குடும்பங்களுக்காக பதினொரு பில்லியன் எண்ணூற்று இருபத்தைந்து மில்லியன் ஐந்நூற்று தொண்ணூற்றாறு ஆயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் (11,825,596,250) அஸ்வெசும தொகை வழங்கப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/the-aswesum-payment-for-the-month-of-july-will-be-credited-today-1784109341

NO COMMENTS

Exit mobile version