Home இலங்கை டெங்கு நோயாளர்களில் பலருக்கு புதிய வைரஸ் பாதிப்பு; பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்

டெங்கு நோயாளர்களில் பலருக்கு புதிய வைரஸ் பாதிப்பு; பல்கலைக்கழகங்களில் புதிய மருத்துவ வழிகாட்டல்

0
image

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக இன்று (20) வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில்

இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 88% பேருக்கு டெங்கு 2 (DENV-2) வைரஸ் திரிபு பாதித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்று நிலைமை காரணமாக இதுவரை இலங்கையில் 75,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

டெங்கு 2 வைரஸ் திரிபுக்கு எதிராக மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Source: https://samugammedia.com/many-dengue-patients-affected-by-a-new-virus-new-medical-guidelines-in-universities-1784522349

NO COMMENTS

Exit mobile version