Home இலங்கை ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் அதிரடிக் கைது! மன்னாரில் சம்பவம்

ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் அதிரடிக் கைது! மன்னாரில் சம்பவம்

0

மன்னார் –  சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை உரிய அனுமதியின்றி பறக்கவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரிடமிருந்து DJI Mini 4 Pro ரக ட்ரோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 

மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில்  சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/boy-who-flew-a-drone-arrested-immediately-incident-in-mannar-1786341999

NO COMMENTS

Exit mobile version