Home இலங்கை தங்கம் விலை மீண்டும் இறங்கியது – சரிந்தது இலங்கை ரூபாய்!

தங்கம் விலை மீண்டும் இறங்கியது – சரிந்தது இலங்கை ரூபாய்!

0
image

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000  ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாளாந்த செலாவணி வீதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை இன்று 332.27 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதன் விற்பனை விலை இன்று 342.00 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்று (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/gold-prices-have-fallen-again—the-sri-lankan-rupee-has-crashed-1780645505

NO COMMENTS

Exit mobile version