சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜயை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில், விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக பேசினார்.
இரு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்தும் வழிகள், கலாச்சார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நட்புறவு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணிப் பாதுகாப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
