Home இலங்கை தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

0
image

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது:

இரண்டாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை. முதலாம் பகுதி வினாத்தாள்: முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுக்கான விரிவான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/announcement-of-dates-for-grade-5-scholarship-and-high-quality-examinations-1780969794

NO COMMENTS

Exit mobile version