Home சினிமா நடிகர் சிங்கம்புலி மனைவி யார் தெரியுமா? ராணுவத்தில் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறாரா

நடிகர் சிங்கம்புலி மனைவி யார் தெரியுமா? ராணுவத்தில் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறாரா

0

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து, அதன்பின் இயக்குனர் அவதாரம் எடுத்து ரெட், மாயாவி போன்ற படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அவர் பல படங்களில் வசனமும் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் சிங்கம்புலி காமெடி நடிகராக தான் பெரிய அளவில் பிரபலம் ஆனார். பாயசம் எங்கடா என்ற அவரது காமெடி தற்போதும் மீம்களாக இணையத்தில் உலா வருகிறது.

சிங்கம்புலி சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதற்கு விளக்கம்கொடுத்த சிங்கம்புலி “ஒரு நடிகராக எது கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்க வேண்டும், அதை தான் செய்தேன்” என பேசி இருந்தார்.

ராணுவத்தில் இருக்கும் மனைவி

சிங்கம்புலி சமீபத்திய பேட்டியில் தனது மனைவி பற்றி பேசி இருக்கிறார். அவரது சொந்த மாமா பெண்ணை தான் அவர் திருமணம் செய்துகொண்டாராம்.

“அந்தமானை சேர்ந்த அவர் தற்போது ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வருகிறார். என் மனைவி பொதுவாக ஹிந்தி படங்கள் தான் பார்ப்பார். நான் நடித்த நான்கைந்து படங்களை தான் இதுவரை பார்த்திருக்கிறார்.”

“மகாராஜா படத்தை பார்த்துவிட்டு அவர் என்ன சொல்ல போகிறாரோ தெரியல” என சிங்கம்புலி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version