Home இலங்கை தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு

0
image

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை நீர்நிலைப் பகுதியில் தற்போது சிறிய அளவிலான வெள்ள நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அத்திணைக்களம், புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுரு கங்கையின்  வெள்ளப்பெருக்கு சமவெளிகளைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மழைவீழ்ச்சி தரவுகள் மற்றும் நிலவும் மழை நிலவரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகவோ அல்லது விரைவாகவோ உயரும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் நாளை (14) இரவு 7.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/flood-risk-in-low-lying-areas-irrigation-department-announcement-1781367490

NO COMMENTS

Exit mobile version