Home இலங்கை தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிப்பு

0
image

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

Source: https://samugammedia.com/the-39th-death-anniversary-of-thiyaga-deepam-thileeban-was-commemorated-with-emotional-fervor-1789449143

NO COMMENTS

Exit mobile version