Home இலங்கை தீவகச் சுற்றுலாவில் புதிய அத்தியாயம்: சர்வதேசத் தரத்தில் உருமாறும் சாட்டிக் கடற்கரை!

தீவகச் சுற்றுலாவில் புதிய அத்தியாயம்: சர்வதேசத் தரத்தில் உருமாறும் சாட்டிக் கடற்கரை!

0
image

சாட்டிக் கடற்கரையை சர்வதேசத் தரத்திலான, பாதுகாப்பான சூழலியல் சுற்றுலாத் தலமாக மாற்றும் பிரமாண்ட வீதி இணைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில், சபை உறுப்பினர்களின் முன்னிலையில் இன்று (14) பிற்பகல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

கடற்கரைக்கான அணுகலைக் கட்டுப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நவீன கம்பி வலை அமைத்தல் மற்றும் கம்பீரமான நுழைவாயில் நிர்மாணம்.சாலையோரப் படிகளை அகலப்படுத்தி நீடித்தல் உள்ளிட்ட பல கட்டமைப்பு மேம்பாடுகள்.

வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், 73 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபை இதனைச் செயல்படுத்துகிறது.

வரும் கார்த்திகை  மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவுசெய்து, கடற்கரையை முற்றிலும் புதிய பொலிவுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவடையும் போது, தீவகப் பிராந்தியத்தின் பொருளாதாரம் உயர்வதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைப் பெரிதும் கவரும் முதன்மைச் சுற்றுலா மையமாக சாட்டிக் கடற்கரை உருவெடுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/a-new-chapter-in-theevagam-tourism-chaatty-beach-transforming-to-international-standards-1786718805

NO COMMENTS

Exit mobile version