Home இலங்கை துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை!

துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை!

0
image

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில்  மேற்கொள்ளப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம் இரவு வியாழக்கிழமை(25) இடம்பெற்றுள்ளது.

119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதான சந்தேக நபர் பொலிஸாரை அச்சுறுத்தி அவர்களை காயப்படுத்தியதுடன் துப்பாக்கியையும் கடமை நேரத்தில் பறிக்க முற்பட்டிருந்தார்.இதன் போது அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சந்தேக நபர் பறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது தலைமறைவான சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.அவ்வேளை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட  ஆரம்ப கட்ட விசாரணையின் போது 2000 ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் 2004 ஆண்டு அவ்வமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக  இவ்வமைப்பில் இருந்து விலகி வந்ததாக குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தின் போது குடிபோதையில் இருந்த சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அதை லோட் செய்து துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பாடம் எடுத்ததுடன்  உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள் என ஏளனத்துடன் பொலிஸாரை வினவியதாக விசாரணையில் கூறியதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் கைதான சந்தேக நபர் 44 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன்  திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளவர் என்பதுடன் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/investigation-into-former-tiger-member-who-snatched-a-gun-1782549723

NO COMMENTS

Exit mobile version