Home இலங்கை துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்

0
image

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த மகிழுந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-car-rammed-into-a-person-riding-a-bicycle-incident-in-kilinochchi-1788345427

NO COMMENTS

Exit mobile version