Home இலங்கை தொலைத்தொடர்பு கோபுரங்களின் கேபிள்களை துண்டித்து திருடிய இருவர் கைது

தொலைத்தொடர்பு கோபுரங்களின் கேபிள்களை துண்டித்து திருடிய இருவர் கைது

0
image

தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை துண்டித்து திருடிய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (13) ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரதுபஸ்வல மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான கேபிள்களை துண்டித்து திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதற்கிடையில், தொலைபேசி கேபிள்களை துண்டித்து திருடியமை உட்பட பல சொத்துக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மொரட்டுவை பொலிஸ் பிரிவில் சுமார் 180,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கேபிள்களை துண்டித்து திருடியமை மற்றும் வீடுகளை உடைத்து சொத்துக்களை கொள்ளையடித்தமை உள்ளிட்ட பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் மற்றும் செப்பு கம்பித் தொகுதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/two-people-arrested-for-cutting-and-stealing-cables-from-telecom-towers-1781417640

NO COMMENTS

Exit mobile version