Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

0

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (31.12.2024)  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது.

அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version