Home இலங்கை நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
image

மொணராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹதராவ குளத்தில் நீராடச் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (07) வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மொணராகலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்றிருந்தபோதே இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-boy-who-went-to-swim-in-the-pond-with-friends-drowned-and-died-1786176500

NO COMMENTS

Exit mobile version