Home இலங்கை நாட்டில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரிப்பு: கொழும்பு, கம்பஹாவில் அதிக நோயாளிகள் பதிவு

நாட்டில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரிப்பு: கொழும்பு, கம்பஹாவில் அதிக நோயாளிகள் பதிவு

0
image

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார்.

இன்று (13) சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான நோயாளிகள் பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டிலிருந்து எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், குறிப்பாக ஆண்களிடையே இந்தத் தொற்று அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் எச்.ஐ.வி தொற்றுக்கான முக்கிய காரணமாக இருப்பதுடன், போதைப்பொருள் பயன்படுத்தும் போது ஊசிகள், சிரிஞ்சுகள் மற்றும் பிற உபகரணங்களை பகிர்ந்து பயன்படுத்துவதும் தொற்று பரவுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருமுறை எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டால் அதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதையும், நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, எச்.ஐ.வி, பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு சிறப்பு நடமாடும் மருத்துவமனைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/increase-in-hiv-cases-in-the-country-more-patients-reported-in-colombo-and-kambaha-1784007752

NO COMMENTS

Exit mobile version