Home இலங்கை நாட்டில் 89,033ஆக அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை; 65 மரணங்கள் பதிவு

நாட்டில் 89,033ஆக அதிகரித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை; 65 மரணங்கள் பதிவு

0
image

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (08) வரையான தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.92 சதவீதமாகவும், 47,310 பேராகவும் பதிவாகியுள்ளது.

மாவட்ட ரீதியில், கம்பஹா மாவட்டத்திலேயே தொடர்ந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, கம்பஹா மாவட்டத்தில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,973 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/the-number-of-dengue-patients-in-the-country-increased-to-89033-65-deaths-recorded-1786264908

NO COMMENTS

Exit mobile version