Home இலங்கை நீதம்’ சட்ட இதழ் நாளை வெளியீடு!

நீதம்’ சட்ட இதழ் நாளை வெளியீடு!

0
image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் ‘நீதம்’ சட்ட இதழின் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நாளை காலை 9.30 மணியளவில் இதழ் வெளியீடு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேயகோன் பிரதம விருந்தினராகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கௌரவ விருந்தினராகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை பத்தாவது தடவையாக இது வெளியிடப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/neetham-law-journal-to-be-released-tomorrow-1783685196

NO COMMENTS

Exit mobile version