Home இலங்கை நீர்கொழும்பில் பதற்றம் உச்சகட்டம்; பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட ஐவர் பலி

நீர்கொழும்பில் பதற்றம் உச்சகட்டம்; பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட ஐவர் பலி

0
image

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையையடுத்து, காயமடைந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் மூவர் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த தொடர்ச்சியான வன்முறைக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதிகள் குழுவுக்கும், தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

நேற்றைய மோதலில் 38 பேர் காயமடைந்த நிலையில், இன்று காலை மீண்டும் ஏற்பட்ட மோதலின் போது மேலும் 35 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை அதிகாரிகளால் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று மீண்டும் சிறைச்சாலையின் சூழ்நிலை சீர்குலைந்துள்ளது.

சிறைச்சாலை வளாகத்தில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/tension-peaks-in-neerkolumbu-five-people-including-security-officers-dead-1783320144

NO COMMENTS

Exit mobile version