Home இலங்கை நுவரெலியாவில் புதிய வர்த்தக சங்கம் கோலாகலமாக ஆரம்பம்!

நுவரெலியாவில் புதிய வர்த்தக சங்கம் கோலாகலமாக ஆரம்பம்!

0
image

தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் வழங்குவதுடன், அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச சந்தைகளிலும் விரிவுபடுத்த உதவும் நோக்கில் நுவரெலியா வர்த்தக சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதையும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டு இந்த சங்கம் நிறுவப்பட்டுள்ளது.

அரலியா குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன அவர்களின் அனுசரணையில், நுவரெலியாவில் உள்ள அரலியா ரெட் ஹோட்டலில் கடந்த 8ஆம் திகதி வர்த்தக சங்கத்தின் ஆரம்ப நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, நுவரெலியா வர்த்தக சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப்பலகையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் சங்கத்தின் இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் நுவரெலியா மேயர் உப்பாலி வனிகசேகர, முன்னாள் மேயர் மஹிந்த தொடம்பேகம, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் சிறு வணிகப் பிரிவு அதிகாரிகள், நுவரெலியா வர்த்தக சங்கத்தின் தலைவர் பண்டார, ஊடகவியலாளர் டக்ளஸ் நனயக்கார உள்ளிட்ட பலரும், சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

புதிய வர்த்தக சங்கத்தின் மூலம் நுவரெலியா மாவட்ட தொழில்முனைவோருக்கு புதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/new-trade-association-opens-with-fanfare-in-nuwara-eliya-1786980117

NO COMMENTS

Exit mobile version